திருமலை : நேற்று மாலை 6.12 மணிக்கு மார்கழி மாதம் பிறந்துள்ளதை அடுத்து, திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இன்று முதல் சுப்ரபாத சேவைக்கு பதில், ஆண்டாள் அருளிய திருப்பாவை சேவை அமல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வரும் ஜனவரி மாதம் 14ந் தேதி வரை திருப்பாவை சேவை நடத்தப்பட்டு, தை மாதம் 1ந் தேதியான ஜனவரி மாதம் 15ந் தேதி முதல் மீண்டும் வழக்கம்போல் சுப்ரபாத சேவை அமல்படுத்தப்படும் என்றும் திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.