TNPSC Group 4 தேர்வு.. தேர்வர்களுக்கான முக்கிய அறிவிப்பு..!

TNPSC குரூப் 4 பணியிடங்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பில் பல்வேறு பிழைகள் இருக்கும் நிலையில் அதனை ஜூன் ஏழாம் தேதிக்குள் மாற்றம் செய்யும்படி விண்ணப்பதாரர்களுக்கு ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் TNPSC வாரியம் கடந்த ஆண்டில் குரூப் 4 பணிகளுக்கான அறிவிப்பை வெளியிட்டது. அதனை தொடர்ந்து தேர்வும் வெற்றிகரமாக நடத்தப்பட்டு கடந்த மார்ச் மாதத்தில் முடிவுகள் வெளியிடப்பட்டது. அதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் அண்மையில் நடைபெற்றது.

இந்நிலையில், விண்ணப்பதாரர்களுக்கு இறுதி வாய்ப்பாக நாளை முதல் ஜூன் 7 ஆம் தேதி மாலை 5:45 மணிக்குள் விடுபட்ட அல்லது பிழையாக இருக்கும் சான்றிதழை சரியாக பதிவேற்றம் செய்யும்படி TNPSC தேர்வாணையத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும், விண்ணப்பதாரர்கள் தேர்வாணைய இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கும் இ- சேவை மையத்தின் மூலமாக சரியான சான்றிதழை பதிவேற்றம் செய்யும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த குறிப்பிட்ட காலத்திற்குள் சரியான சான்றிதழை விண்ணப்பிக்காதவர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் எனவும் டிஎன்பிஎஸ்சி சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

https://www.tnpsc.gov.in/Document/PressEnglish/45_2023_group-iv.pdf