செல்வத்தின் அதிபதியாக விளங்கக் கூடிய லட்சுமி தேவியின் அருள் இருந்தால் மட்டுமே அனைத்து விதமான இன்பங்களையும் நம்மால் பெற முடியும். அப்படி மகாலட்சுமியின் அருளை பெருவதற்காக கடைபிடிக்கப்படும் எத்தனையோ முக்கியமான விரதங்களில் ஒன்று வரலட்சுமி விரதம். பொதுவாக அம்மன் வழிபாட்டிற்குரிய விரதங்கள் அனைத்தும் ஆடி மாதத்தில் தான் வரும். ஆனால் ஆடி மாதத்தில் இரண்டு அமாவாசைகள் அல்லது இரண்டு பெளர்ணமிகள் வந்தால் வரலட்சுமி விரதம் ஆவணி மாதத்தில் வரும். ஆவணி மாத வளர்பிறையில் வரும் வெள்ளிக்கிழமையில் கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில் நாளை ஆகஸ்ட் 25ஆம் தேதி வெள்ளிக்கிழமை வரலட்சுமி விரதமாகும்.
லட்சுமி தேவியின் அருளை பெற இதை மறக்காமல் செய்யுங்கள்..
1. வீட்டை எப்போதும் சுத்தமாக வைத்திருங்கள். காலை, மாலை வாசலில் கோலமிட்டு தீபமேற்றுங்கள். குறிப்பாக வரலட்சுமி விரதமான நாளை இதை செய்யுங்கள்.
2. வீட்டை எப்போதும் சுத்தமாக வைத்திருங்கள். காலை, மாலை வாசலில் கோலமிட்டு தீபமேற்றுங்கள்.
3. பெண்கள் தூய சிந்தனையோடு சமையலில் ஈடுபடுங்கள். வீட்டிற்கு வரும் விருந்தினரை மனமுவந்து உபசரியுங்கள்.
4.குழந்தைகள், பெரியவர்களுக்கு சேவை செய்யவதன் மூலம் லட்சுமி தேவியின் அருளைப்பெற முடியும்.
5.வீடாயினும், பணிபுரியும் இடமாயினும் சண்டை சச்சரவுக்கு இடம் கொடுக்காதீர்கள்.
6. வெற்றியோடு வாருங்கள் என நல்ல வார்த்தைகளையே பேசுங்கள். அதனால் வீட்டில் நேர்மறையான ஆற்றல் இருக்கும்.
7.செல்வ வளம், தைரியம், ஞானம், குழந்தை வரம் உள்ளிட்ட வரங்களை அருள்பவள் மகா லட்சுமி. அவளின் ஆசியை பெற மேற்சொன்னவற்றை கடைபிடிப்பது நல்லது.