மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைக்க நாளை கடைசி...

மத்திய அரசு அறிவுறுத்தலின்பேரில், இலவசம் மற்றும் மானியம் பெறும் மின்நுகர்வோரின் மின்இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியை தமிழக மின்வாரியம் கடந்த ஆண்டு நவம்பர் 15ஆம் தேதி தொடங்கியது.

இதற்காக, தமிழகம் முழுவதும் 2,811 மின்வாரிய பிரிவு அலுவலகங்களில் சிறப்பு கவுன்ட்டர்கள் அமைக்கப்பட்டன. முதலில், டிசம்பர் 31ஆம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டது. பலரும் ஆதாரை இணைக்காததால், ஜனவரி 31 பின்னர் பிப்ரவரி 15 என அவகாசம் அளிக்கப்பட்டு, பின்னர் பிப்ரவரி 28ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. இதுவரை 99 சதவீதம் பேர் ஆதார் எண்ணை இணைத்துள்ளார்.

இந்த கெடு நாளையுடன் முடிகிறது. இதற்கு மேல் அவகாசம் வழங்கப்படாது என்று மின்வாரியம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

மின் இணைப்புடன் ஆதாரை இணைக்க… https://nsc.tnebltd.gov.in/adharupload/ ஐப் பார்வையிடவும்.