அறு சுவைகளில் இனிப்பு என்றால் நம் அனைவருக்கும் அலாதி பிரியம். சர்க்கரை, வெல்லம், கற்கண்டு உள்ளிட்ட இனிப்பு சுவை தரும் பொருட்களை வைத்து செய்யப்படும் பண்டங்கள் மிகவும் சுவையாக இருப்பதினால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இனிப்பு பண்டங்களுக்கு அடிக்ட் ஆகிவிட்டோம். அந்த வகையில் கேரளாவின் வாழைப்பழ ஹல்வா அதிக மணம் மற்றும் சுவையில் செய்யும் கீழே கொடுக்கப்பட்டு இருக்கிறது. இவை பால், அரிவாழைப்பழம், வெள்ளை சர்க்கரை உள்ளிட்டவைகளை கொண்டு தயாரிக்கப்படும் ஒரு ஹல்வா வகை ஆகும்.
தேவையான பொருட்கள்
*வாழைப்பழம் – 3
*வெள்ளை சர்க்கரை – 100 கிராம்
*நெய் – 75 கிராம்
*முந்திரி – சிறிதளவு
*ஏலக்காய் தூள் – சிறிதளவு
வாழைப்பழ ஹல்வா செய்யும் முறை..
ஒரு மிக்ஸி ஜாரில் மூன்று வாழை பழங்களை சேர்த்து மைய்ய அரைத்துக் கொள்ளவும்.
அடுத்து அடுப்பில் ஒரு இரும்பு கடாய் வைத்து அதில் தேவையான அளவு நெய் ஊற்றவும். அவை சூடேறியதும் அரைத்து வைத்துள்ள வாழைப்பழ விழுதை சேர்த்து கொள்ளவும். வாழைப்பழ விழுது நெய்யில் நன்றாக வதங்கி வரும் வரை கை விடாமல் கிளறி விடவும்.
பின்னர் 100 கிராம் அளவு வெள்ளை சர்க்கரை சேர்த்து மீண்டும் கைவிடாமல் கிளறவும். வாழைப்பழ கலவையில் சேர்த்த சர்க்கரை கரைந்து இளகி வரும் வரை கிளற வேண்டும். தொடர்ந்து கிளறி வர ஹல்வாவின் நிறம் மாறத் தொடங்கும். அந்த சமயத்தில் தேவையான அளவு நெய்யை ஊற்றி சில நிமிடங்கள் கிளறி விடவும். அடுப்பை மிதமான தீயில் வைக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
பின்னர் அடுப்பில் தாளிப்பு கரண்டி வைத்து அதில் சிறிதளவு நெய் ஊற்றவும். அவை சூடேறியதும் 75 கிராம் முந்திரி சேர்த்து வறுத்து ஹல்வாவில் சேர்க்கவும். அடுத்து வாசனைக்காக சிறிதளவு ஏலக்காய்த் தூள் சேர்த்து மீண்டும் கிளறி விடவும். ஹல்வா இரும்பு கடாயில் ஒட்டாமல் வரும் வரை கிளறி கொண்டே இருக்கவும்
ஒட்டாமல் ஹல்வா திரண்டு வரும் போது ஒரு தட்டில் நெய் தடவி ஹல்வாவை பரப்பி விடவும். ஹல்வா ஆறியப் பிறகு ஒரு பவுலுக்கு மாற்றி பரிமாறவும். இந்த முறையில் வாழைப்பழ ஹல்வா செய்தால் அதிக வாசனை மற்றும் சுவையுடன் இருக்கும்.