TVS XL எலக்ட்ரிக் மொபட் விரைவில் அறிமுகம்!

TVS மோட்டார் நிறுவனத்தின் பிரசத்தி பெற்ற XL மொபட் அடிப்படையில் XL எலக்ட்ரிக் மாடலை தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றது. இந்திய முழுவதும் நல்ல வரவேற்பினை பெற்ற XL எலக்ட்ரிக் மாடலாக வரும் பொழுது பல வாடிக்கையாளர்களை கூடுதலாக கவரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. சமீபத்தில் கைனடிக் நிறுவனம் லூனா மாடலை எலக்ட்ரிக் ஆக வெளியிட திட்டமிட்டுள்ள நிலையில், எக்ஸ்எல் மாடலும் இணைந்துள்ளது. குறிப்பாக பல்வேறு எலக்ட்ரிக் வாகன தயாரிப்பாளர்கள் XL போன்ற வடிவமைப்பினை பெற்ற எலக்ட்ரிக் மொபட் அறிமுகம் செய்துள்ளனர்.

TVS XL எலக்ட்ரிக் மொபட் அதன் பெட்ரோல் மாடலை போல கட்டமைப்பை பெற்றதாக உள்ளது. பிரேம், ரவுண்ட் ஹெட்லைட், ஸ்பிலிட் சீட், ட்யூபுலர் கிராப்-ரெயில் போன்றவை தற்போது விற்பனையில் உள்ள XL 100 மாடலுக்கு இணையாகவே இருக்கின்றன. XL EV மாடலுக்கு ஏற்ற பேட்டரி பேக் மற்றும் பெல்ட் அமைப்புடன் பொருத்தப்படலாம். முன்புறத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க்கு மற்றும் இரட்டை பின்புற ஷாக் அப்சார்பர் பெற்றுள்ளது. இதன் பிரேக்கிங் அமைப்பில் டிரம் பிரேக் பெற்று ஸ்போக் வீல் கொண்டுள்ளது.

விற்பனையில் உள்ள பெட்ரோல் என்ஜின் பெற்ற 99.7 CC, சிங்கிள் சிலிண்டர், ஏர் கூல்டு என்ஜின் 4.3 PHP மற்றும் 6.5 NM வெளிப்படுத்துகின்றது. இதன் எடை 86 கிலோ மற்றும் 130 கிலோ சுமக்கும் திறன் கொண்டது.
வரும் ஆகஸ்ட் 23 ஆம் தேதி புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டரை டிவிஎஸ் வெளியிட உள்ள நிலையில் XL பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.