இந்தியாவில் Maruti Suzuki நிறுவனம் அதன் Nexa மாடல் கார்களுக்கு 54 ஆயிரம் ரூபாய் தள்ளுபடி அறிவித்துள்ளது. இதில் Maruti Suzuki Ignis, Ciaz, Baleno போன்ற மாடல்களுக்கு இந்த சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த காரில் CNG மற்றும் ஆட்டோமேட்டிக் என இரு வேரியண்ட் உள்ளன. இந்த கார்களின் சலுகைகள் பற்றிய முழு விவரங்களை இந்த பதிவில் காணலாம்.
Maruti Suzuki Ignis
மேனுவல் வேரியண்ட் கார்களுக்கு 35 ஆயிரம் ரூபாய் வரை Cash Discount மற்றும் 15 ஆயிரம் ரூபாய்க்கான Corporate Benefits நமக்கு கிடைக்கும். இந்த காருக்கு மொத்தமாக 54 ஆயிரம் ரூபாய் சலுகை கிடைக்கிறது. ஆட்டோமேட்டிக் வேரியண்ட் கார்களுக்கு 35 ஆயிரம் ரூபாய் தள்ளுபடி, 15 ஆயிரம் ரூபாய்க்கான எக்ஸ்சேஞ்சு சலுகை மற்றும் 4000 ஆயிரம் மதிப்பிலான Corporate Benefits உள்ளன.
Maruti Suzuki Baleno
மேனுவல் வேரியண்ட் கார்களுக்கு 35 ஆயிரம் ரூபாய் வரை தள்ளுபடி கிடைக்கிறது. இதன் CNG மற்றும் ஆட்டோமேட்டிக் ஆகிய வேரியண்ட்களுக்கு சலுகைகள் எதுவும் அறிவிக்கப்படவில்லை. இந்த காரில் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் உள்ளது. இதன் பவர் 90BHP மற்றும் 5 ஸ்பீட் MT/AMT கியர் வசதி உள்ளது.
Maruti Suzuki Ciaz
இந்த காருக்கு 28 ஆயிரம் ரூபாய் வரை தள்ளுபடி கிடைக்கிறது. இதன் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் என இரு வேரியண்ட்களுக்கு மட்டும் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு 25 ஆயிரம் ரூபாய் வரை Exchange offer மற்றும் 3000 ஆயிரம் ரூபாய்கான Corporate Discount உள்ளது.