ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மீண்டும் நீர்வரத்து அதிகரிப்பு...

ஆப்பிள் நிறுவனம் தயாரிக்கும் ஐபோன்கள், ஐபேட்கள், உள்ளிட்ட சாதனங்களில் பாதுகாப்பு குறைபாடுகள் தொடர்பாக, எச்சரிக்கை விடுத்துள்ள இந்திய கம்ப்யூட்டர் எமர்ஜென்சி ரெஸ்பான்ஸ் டீம்( CERT-In), பயனர்களின் தகவல்கள் திருடப்படலாம் எனக்கூறியுள்ளது.

அதன்படி, ஆப்பிள் சாதனங்களில் உள்ள பயனர்களின் முக்கிய தகவல்கள் கசிய வாய்ப்புள்ளது, Arbitrary code execution (ACE) எனப்படும் சைபர் தாக்குதலுக்கு ஆப்பிள் சாதனங்கள் எளிய இலக்காக உள்ளது, ஆப்பிள் சாதனங்களின் பாதுகாப்பு கட்டுப்பாடுகள் எளிதில் bypass செய்து தகர்க்கப்பட வாய்ப்புள்ளது, சேவை மறுப்பு எனப்படும் Cause denial of service (DoS) குறைபாடு ஏற்படவும், பாதுகாப்பைக் தகர்க்கும் spoofing தாக்குதல் மூலமும் ஆப்பிள் சாதனங்கள் எளிதில் குறிவைக்கப்பட வாய்ப்புள்ளதாக அந்த அறிக்கையில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

பாதிப்பை ஏற்படுத்தும் ஆப்பிள் மென்பொருட்கள் விபரம்:

* ஐஓஎஸ் மற்றும் ஐபேட்: 17.6 மற்றும் 16.7.9 முந்தைய பதிப்புகள்
* மேக் ஓஎஸ்(OS) :14.6 13.6.8 மற்றும் 12.7.6க்கு முந்தைய பதிப்புகள்
* வாட்ச் ஓஎஸ்: 10.6 பதிப்புக்கு முந்தையது
* டிவி ஓஎஸ்: 17.6க்கு முந்தைய பதிப்பு
* சபாரி: 17.6க்கு முந்தைய பதிப்பு
இந்த மென்பொருளில் உள்ள குறைபாடுகள் மூலம் சைபர் தாக்குதலில் ஈடுபடுபவர்கள் சாதனங்களில் இருந்து பயனர்களின் முக்கிய தகவல்களை திருடவும், பாதுகாப்பு குறைபாடுகளை ஏற்படுத்தவும் முடியும் என எச்சரிக்கப்பட்டு உள்ளது. இந்த ஆபத்துகளில் இருந்து தப்பிக்க, பயனர்கள் அனைவரும் ஆப்பிள் சாதனங்களின் மென்பொருட்களை அப்டேட் செய்ய வேண்டும் என சிஇஆர்டி- ஐஎன் அறிவுறுத்தி உள்ளது.

ஆப்பிள் நிறுவனமும், ஐபோன்களை குறிவைத்து ஸ்பைவேர் தாக்குதலுக்கு உள்ளாகலாம் என இந்தியா உள்ளிட்ட 150 நாடுகளை சேர்ந்தவர்களுக்கு எச்சரிக்கை விடுத்து உள்ளது. இது குறித்து மத்திய தகவல் தொலைத் தொடர்புத்துறை அமைச்சகம் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. சிஇஆர்டி – ஐஎன் நிறுவனம் தொடர்ந்து கண்காணித்து வருகிறது.