ஆரம்பமே 400 கோடியா..?
புது சாதனை படைக்கும் விஜய்யின் ‘லியோ’ திரைப்படம்..!

விஜய் நடித்து வரும் லியோ படம் ரிலீஸுக்கு முன்பே ரூ. 400 கோடி வசூல் செய்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. 

விஜய்யின் லியோ படம் இன்னும் ரிலீஸாகாத நிலையில் முந்தைய படத்தின் வசூலை முந்திவிட்டதாக கூறப்படுகிறது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், த்ரிஷா, அர்ஜுன், சஞ்சய் தத், கவுதம்மேனன், மிஷ்கின் உள்ளிட்டோர் நடித்து வரும் படம் ‘லியோ’. முதல்கட்ட படப்பிடிப்பை சென்னையில் நடத்தினார்கள். இதையடுத்து இரண்டாவது கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் நடந்து வருகிறது. நடுங்கும் குளிரிலும் படக்குழு தீவிரமாக வேலை செய்து வருகிறது. இந்நிலையில் வசூல் விபரம் வெளியாகியிருக்கிறது.

‘லியோ’ படம் தற்போதே ரூ. 400 கோடி வசூல் செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ரிலீஸுக்கு முன்பே ரூ. 400 கோடி வசூல் செய்யும் முதம் தமிழ் படம் என்கிற பெருமையை பெறவிருக்கிறது ‘லியோ’. படத்தின் டிஜிட்டல் உரிமத்தை நெட்ஃப்ளிக்ஸ் ரூ. 120 கோடிக்கு வாங்கியிருக்கிறது. சாட்டிலைட் உரிமையை சன் டிவிக்கு ரூ. 70 கோடிக்கு கொடுத்திருக்கிறார்கள்.

இசை உரிமையை சோனி மியூசிக் ரூ. 18 கோடிக்கு வாங்கியிருக்கிறது. இந்தி டப்பிங் சாட்டிலைட் உரிமையை பெற இரண்டு நிறுவனங்களுக்கு இடையே போட்டி நடந்து வருகிறது. இரண்டு வாரங்களில் அந்த உரிமையும் விற்பனையாகிவிடுமாம். இந்தி டப்பிங்கின் சாட்டிலைட் உரிமம் ரூ. 30 கோடிக்கு செல்லும் என்று கூறப்படுகிறது.

தியேட்டர் உரிமம் ரூ. 175 கோடிக்கு போயிருக்கிறதாம். லோகேஷ் கனகராஜ் இயக்குவதாலேயே ‘லியோ’ படம் மீது அதிக எதிர்பார்ப்பு இருக்கிறது. ‘லியோ’ படம் ரிலீஸானால் வசூலில் நிச்சயம் புது சாதனை படைக்கும் என்று நம்பப்படுகிறது. ‘லியோ’ படமும் லோகேஷ் கனகராஜின் LCU கதைதான். ‘லியோ’ படப்பிடிப்பை ஆகஸ்ட் மாதத்திற்குள் முடித்துவிட திட்டமிட்டுள்ளனர். படத்தை அக்டோபர் மாதம் 19ம் தேதி ரிலீஸ் செய்ய முடிவு செய்திருக்கிறார்கள்.