டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை இப்போது தான் வெஸ்ட் இண்டீஸில் நடந்து முடிந்தது. இதில் இறுதிப் போட்டியில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. கடந்த 2007-ம் ஆண்டிற்குப் பிறகு இந்திய அணி டி20 உலகக் கோப்பையை வெல்வது இதுவே முதல்முறையாகும்.
இறுதி போட்டியில் விராட் கோலி எடுத்த 76 ரன்கள் அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது. இந்த போட்டி தொடருடன் கோலி சர்வேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்துவிட்டார். இந்திய கிரிக்கெட் அணியில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக விராட் கோலி முன்னணி இடத்தை பிடித்துள்ளார். இந்திய அணிக்கு பல முக்கியமான போட்டிகளில் விராட் கோலி சிறப்பாக விளையாடி வெற்றியை தேடி தந்துள்ளார்.
இன்னும் ஒரு நாள் கிரிக்கெட் தொடர் மற்றும் டெஸ்ட் போட்டிகள் மட்டுமே விராட் கோலி விளையாடுவார். அதனால் அடுத்த இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்குள் அவர் ஒட்டுமொத்தமாக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனையடுத்து அவர் ஓய்வுக்கு பின்னர் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் லண்டனில் குடியேற திட்டமிட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவியுள்ளன.
இந்நிலையில் மும்பையில் உள்ள அலிபாக் நகரில் நீண்ட நாட்களாக கட்டி வந்த வீடு நிறைவு பெற்றுள்ளது. அந்த புதிய வீட்டை ரசிகர்களுக்கு காண்பிக்கும் வகையில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ மூலம் லண்டனுக்கு குடியேற உள்ளார் என்ற வதந்திக்கு கோலி முற்றுப்புள்ளி வைத்துள்ளார் என்றே சொல்லலாம்.
புதிய வீடு குறித்து விராட் கோலி கூறியதாவது:-
எனது அலிபாக் வீட்டைக் கட்டுவதற்கான பயணம் ஒரு தடையற்ற அனுபவமாக இருந்தது. இவை அனைத்தும் ஒன்றிணைவதைப் பார்ப்பது உண்மையிலேயே மகிழ்ச்சி அளிக்கிறது. எங்கள் கனவு இல்லத்தை நனவாக்கிய அவாஸ் குழுவிற்கும் மிகப்பெரிய நன்றி. இங்கு என் அன்புக்குரியவர்களுடன் ஒவ்வொரு தருணத்தையும் அனுபவிக்க காத்திருக்க முடியாது.
இவ்வாறு கோலி கூறினார்.
இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
The journey of building my Alibaug home has been a seamless experience, and seeing it all come together is truly gratifying. Huge thanks to the entire Avas team for making our dream home a reality. Can't wait to enjoy every moment here with my loved ones!#avaswellness… pic.twitter.com/x17iL3ETfM
— Virat Kohli (@imVkohli) July 9, 2024