விவோ நிறுவனம் அடுத்து விவோ ஒய்100 ஜிடி எனும் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது. தற்போது இந்த ஸ்மார்ட்போன் கூகுள் பிளே கன்சோல் தளத்தில் காணப்பட்டுள்ளது. எனவே இந்த புதிய விவோ ஒய்100 ஜிடி மாடல் விரைவில் அறிமுகம் செய்யப்பட அதிக வாய்ப்புகள் உள்ளது. குறிப்பாக கூகுள் பிளே கன்சோல் தளத்தில் விவோ ஒய்100 ஜிடி ஸ்மார்ட்போனின் சிப்செட், கேமரா போன்ற முக்கிய விவரக்குறிப்புகள் கசிந்துள்ளது. அதேபோல் இந்த போன் பட்ஜெட் விலையில் வெளிவரும் என்று கூறப்படுகிறது. மேலும் இப்போது கூகுள் பிளே கன்சோல் தளத்தில் வெளியான விவோ ஒய்100 ஜிடி ஸ்மார்ட்போனின் அம்சங்களை இப்போது பார்ப்போம்.
விவோ ஒய்100 ஜிடி அம்சங்கள்: 6.56-இன்ச் 1.5கே ஃபுல் எச்டி பிளஸ் அமோலெட் டிஸ்பிளே (AMOLED display) உடன் இந்த விவோ ஒய்100 ஜிடி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். மேலும் 1080 x 2,388 பிக்சல்ஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்(120Hz refresh rate), 1300 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே. இந்த போனின் டிஸ்பிளே தனித்துவமான திரை அனுபவத்தை வழங்கும்.
சக்திவாய்ந்த மீடியாடெக் டைமன்சிட்டி 8200 சிப்செட் வசதியுடன் இந்த விவோ ஒய்100 ஜிடி ஸ்மார்ட்போன் வெளிவரும். குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். பின்பு ஃபன்டச் ஓஎஸ் 14 (FunTouch OS 14) சார்ந்த ஆண்ட்ராய்டு 14 (Android 14) இயங்குதள வசதியுடன் இந்த விவோ ஒய்100 ஜிடி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.
12ஜிபி ரேம் (12GB RAM) மற்றும் 256ஜிபி மெமரி (256GB storage) வசதியுடன் இந்த விவோ ஒய்100 ஜிடி ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது. குறிப்பாக இந்த போனின் வடிவமைப்பு மற்றும் மென்பொருள் அமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது விவோ நிறுவனம்.
மாலி-ஜி610 ஜிபியு (Mali-G610 GPU) கிராபிக்ஸ் கார்டு கொண்டுள்ளது இந்த விவோ ஒய்100 ஜிடி ஸ்மார்ட்போன். எனவே கேமிங் பயனர்கள் இந்த போனை நம்பி வாங்கலாம். குறிப்பாக கேமிங வசதிகளுக்குத் தகுந்தபடி இந்த போன் உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. விவோ ஒய்100 ஜிடி ஸ்மார்ட்போனின் பின்புறம் 50எம்பி பிரைமரி கேமரா, 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் மற்றும் 2எம்பி டெப்த் சென்சார் இருக்கும். எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் துல்லியமான புகைப்படங்கள் மற்றும் க்களை எடுக்க முடியும். மேலும் இந்த போனின் முன்புறம் 16எம்பி செல்பி கேமரா வசதி உள்ளது.
இதுதவிர பல்வேறு கேமரா அம்சங்களுடன் இந்த விவோ ஒய்100 ஜிடி ஸ்மார்ட்போன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார்(Side-mounted Fingerprint Sensor) வசதியைக் கொண்டுள்ளது இந்த விவோ ஒய்100 ஜிடி ஸ்மார்ட்போன். மேலும் டால்பி ஆடியோ அம்சம் இந்த ஸ்மார்ட்போனில் உள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விவோ ஒய்100 ஜிடி ஸ்மார்ட்போனில் 5000எம்ஏஎச் பேட்டரி (5,000mAh battery) வசதி உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இதன் பேட்டரி சார்ஜிங் செய்ய ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் (fast charging support) உள்ளது. குறிப்பாக இந்த போனை சில நிமிடங்களில் சார்ஜ் செய்துவிட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
5ஜி, வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளுடன் இந்த விவோ ஸ்மார்ட்போன் வெளிவரும். அதேபோல் இந்த விவோ வி30 ஸ்மார்ட்போன் ஆனது ரூ.20,000 பட்ஜெட்டில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. உலகம் முழுவதும் விவோ ஒய்100 ஜிடி ஸ்மார்ட்போன் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது என்றுதான் கூறவேண்டும்.