என்ன படிக்க வேண்டும்
இஸ்ரோவில் பணியாற்ற STEM (Science, Technology, Engineering and Maths) பாடப் பிரிவுகளில் பட்டப்படிப்பு, முதுநிலைப் படிப்பு அல்லது ஆய்வுப் படிப்புகள் (பதவிக்கு ஏற்ப) படித்திருக்க வேண்டும். ஆனால் இஸ்ரோக்கு என்று தனிப் படிப்புகள் ஏதும் இல்லை. அறிவியல் மற்றும் கணிதம் அடிப்படை படிப்பு ஆகும். JEE தேர்வு எழுதி IIT, IISC போன்ற கல்வி நிலையங்களில் பி.இ, பி.டெக் போன்ற பாடப்பிரிவுகளில் சேர்ந்து படிக்கலாம். மேலும், திருவனந்தபுரத்திலுள்ள இஸ்ரோவின் கீழ் இண்டியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஸ்பேஸ் சயன்ஸ் அண்ட் டெக்னாலஜி (IIST) என்ற நிகர்நிலை பல்கலைக்கழகம் உள்ளது. பிற கல்வி நிறுவனங்களில் பயின்றாலும் உங்களால் இஸ்ரோவில் பணியில் சேர முடியும்.
இஸ்ரோவில் ஒரு திட்டத்தில் பணியமர்த்தப்பட்ட பின் அதற்கான படிப்பையும், பயிற்சியையும் அவர்களே அளிப்பார்கள். அதனால் மாணவர்கள் தாங்கள் தேர்ந்தெடுக்கும் படிப்பில் நிபுணத்துவத்துடன் இருக்க வேண்டும். மாணவர்கள், கேள்விக்கு பதிலளிப்பதைக் காட்டிலும், கேள்வியை உருவாக்கி அதற்கான விடைகளைக் காணும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
விண்வெளி விஞ்ஞானியாக…
விண்வெளி ஆராய்ச்சி & புவியமைப்பு உள்ளிட்ட துறைகளில் ஆர்வமுள்ள, சாதிக்க விரும்பும் மாணவர்களுக்கான சிறந்த கல்லூரி தான் மேலே குறிப்பிட்ட IIST ஆகும். ஆங்கு வழங்கும் படிப்புகள்…
இளநிலை படிப்புகள்
முதுகலை படிப்புகள்
நுழைவுத் தேர்வு
JEE Advanced நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். படிப்பதற்கு கல்வி உதவித்தொகையும் வழங்கப்படும். இங்கு இளநிலையில் 560 இடங்களும், முதுநிலையில் 160 இடங்களும் உள்ளன. மேலும் அறிந்துக்கொள்ள www.iist.ac.in என்ற இணையதளத்தை பயன்படுத்தவும்.