தலைமுடி நீளமாக வளர வேண்டுமா? அப்போ இதை செய்து பாருங்கள்!

சீனா மற்றும் ஜப்பானில் உள்ள பெண்கள் நீண்ட காலமாக தங்கள் கூந்தல் நீளமாக வளரவும், நரைப்பதை நிறுத்தவும் அரிசி நீரை பயன்படுத்துகின்றனர். அரிசி சமைத்த பிறகு அல்லது ஊறவைத்த பிறகு எஞ்சியிருக்கும் மாவுச்சத்து நீர் அரிசி நீர். இது முடியை மிருதுவாகவும், பளபளப்பாகவும் மாற்றும், அது வேகமாக வளர உதவும் என்றும் கருதப்படுகிறது. அரிசியை நன்றாக கழுவி எடுத்துக் கொள்ள வேண்டும். பின் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் மற்றும் கழுவிய அரிசி சேர்த்து 12 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.
சரியாக 12 மணி நேரம் ஊறிய தண்ணீரை மட்டும் எடுத்து வடிகட்டி, அந்த தண்ணீரை வைத்து முடியை அலச வேண்டும்.

நன்மைகள்

• முடியை மென்மையாக்குகிறது.
• பிரகாசம் அதிகரிக்கிறது.
• முடியை வலிமையாக்குகிறது.
• முடி நீளமாக வளர உதவுகிறது.
• அரிசி நீரில் உள்ள குறைந்த pH மதிப்பு மற்றும் அதிக ஊட்டச்சத்துக்கள் காணப்படுவதால் இது முடியை வலுவாக்குகின்றது.
• புரோட்டீன்கள் முடி தண்டை வலுப்படுத்தவும், விரிசல்களை சரிசெய்யவும் உதவுகின்றது.
• அரிசி தண்ணீரை தலை முடிக்கு தடவ வேண்டும். 15 – 20 நிமிடங்கள் வரை உலர வைத்து கழுவ வேண்டும். இவ்வாறு செய்தால் முடியின் வளர்ச்சியும் அதிகரிக்கும்.