தற்போது கொலஸ்ட்ரால் நோயானது வயது வித்தியாசம் பார்க்காமல் அனைவருக்கும் பாதிப்பை ஏற்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுவாக உடலில் கொலஸ்ட்ரால் அதிகமாவதற்கு காரணம் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுகளை அதிகம் உட்கொள்வதால் தான். அப்படி அதிகம் கொலஸ்ட்ரோலால் பாதிக்கப்படுபவர்களுக்கு காலை சாப்பிட ஏற்ற உணவுதான் இந்த கொள்ளு மசால் தோசை.
தேவையான பொருட்கள்:
அரிசி – 1 கப், கொள்ளு பருப்பு – 1/2 கப், வெந்தயம் – 1 தேக்கரண்டி, தண்ணீர்- தேவைக்கேற்ப, எண்ணெய்- தேவையான அளவு, உப்பு – தேவைக்கேற்ப, வேகவைத்த உருளைக்கிழங்கு -2, வெங்காயம் – 1, கடுகு – 1/2 தேக்கரண்டி, கறிவேப்பிலை, மஞ்சள் தூள் -1/2 தேக்கரண்டி, மிளகாய் தூள் – 1/2 தேக்கரண்டி, பச்சை மிளகாய் – 1, கொத்தமல்லி.
செய்முறை:
1. முதலில் அரிசி, கொள்ளு, வெந்தயத்தை சுத்தம் செய்து கழுவவும். அவற்றை ஒன்றாக 5 மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும்.
2. அரிசி, கொள்ளு, வெந்தயம் ஆகியவை ஊறியதும் கெட்டியான மாவு போல அரைக்கவும். அரைத்து எடுத்துக் கொண்ட பின்னர் 8-10 மணி நேரம் அல்லது இரவு முழுவதும் புளிக்க விடவும்.
3. பின்னர் ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை தாளித்து, வெங்காயம், பச்சை மிளகாயை வதக்கிக் கொள்ளவும்.
4. பிறகு மஞ்சள் தூள், மிளகாய் தூள், வேகவைத்த உருளைக்கிழங்கை சேர்த்துக் கொள்ளவும். எல்லா பொருட்களையும் ஒன்றாக கலந்த பின்னர் உப்பு சேர்த்து எல்லாப் பொருட்களையும் நன்றாக கலக்கி மிதமான தீயில் கிளறி கொத்தமல்லி இலைகளை மேலாக தூவி விட்டு இறக்கிக்கொள்ளவும்.
5. பின்னர் தோசைக்கு செய்த மாவில் தோசை ஊற்றி பொன்னிறமாக வெந்தததும் மறுபுறம் திருப்பி நடுவில் தயாரித்து வைத்த உருளைக்கிழங்கு மசாலாவை வைத்து பாதியாக மடித்து எடுத்துக் கொண்டால் கொள்ளு மசால் தோசை தயார்.