சனிக்கிழமையில் வரும் தை அமாவாசைக்கு அப்படியென்ன சிறப்பு!

தை அமாவசை என்றாலே தனிச் சிறப்புதான். அதிலும் சனிக்கிழமை வரும் தை அமாவாசை என்றால் இன்னும் கூடுதல் சிறப்பு. சனி அமாவாசை அன்று கருப்பு உளுந்து, கருப்பு எள், வெல்லம், புதிய ஆடைகள் ஆகியவற்றை நாம் தானம் அளித்தால் மிகவும் நல்லது. இதனால் நம் முன்னோர்களின் ஆசி கிடைக்கும் என சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது.

மறைந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க ஆடி அமாவாசை, புரட்டாசி மாதம் வரும் மகாளய அமாவாசை, தை அமாவாசை போன்றவை சிறப்பு வாய்ந்த நாட்களாகும்.

அமாவாசை தினத்தில் ஆண்கள் விரதமிருந்து தர்ப்பணம் கொடுக்க வேண்டும். அதே சமயம் சுமங்கலி பெண்கள் கண்டிப்பாக அமாவாசை விரதம் இருக்கக்கூடாது என்று சாஸ்திரம் சொல்லுகிறது. பெண்கள் அமாவாசை விரதம் இருப்பதில் சில விதி முறைகள் நிறைந்திருக்கிறது. முன்னோர்களுக்கு பிடித்த உணவுகளை மதிய உணவிற்கு சமைத்து அதை மறைந்த முன்னோர்களின் புகைப்படங்களுக்குப் பொட்டு வைத்து, பூ வைத்து படைக்க வேண்டும். அவ்வாறு சமைக்கும் காய்கறிகளில் சிலவற்றை பயன்படுத்தக்கூடாது. அதேப்போன்று சில காய்கறிகளை சேர்த்து சமைத்தால் வீட்டிற்கு நன்மையை உண்டாக்கும் என்பது ஐதீகம். அமாவசை ஒரு புனித நாள். இது உங்களுடைய வாழ்க்கைத் துணைக்கு ஆரோக்கியமும் முன்னேற்றமும் தரக் கூடியது.

செய்யக் கூடியது:

ஒரு அரச மரத்தின் கீழ் கடுகு எண்ணெய் தீபம் ஏற்றுவது நல்லது.

காலையில் சீக்கிரம் எழுந்து சிவன், விஷ்ணுவை வணங்க வேண்டும்.

பூமியில் ஒரு ஸ்பூன் பால் ஊற்ற வேண்டும். அது உங்கள் வாழ்வில் இடையூறுகளை கடந்துவர உதவும்.

சனி கோயிலில் கடுகு எண்ணெய், கருப்பு உளுந்து, இரும்புத் துண்டு, நீல மலர் தானமாகக் கொடுத்து வணங்க வேண்டும்.

சனி மந்திரத்தை 101 முறை ஜெபிக்க வேண்டும்.
‘Om Nilanjansamabhas Ravuputra Yamagrajam. Chayamartandsambhut Namami Shanaishchara’
என்பது தான் அந்த மந்திரம்.
இது கோபம், கெட்ட பலன்கள் ஆகியனவற்றை நீக்கும்.

பசு மாட்டுக்கு பழங்கள் வழங்கலாம். இதனால் குடும்பத்தில் அமைதியும், ஒற்றுமையும் ஓங்கும்.

நீரில் எள்ளை கரைத்து வேண்டிக் கொள்ளலாம்.

செய்யக்கூடாதவை:

இந்த நாளில் எந்த ஒரு நல்ல காரியமும் செய்யக்கூடாது.

துளசி இலையை பறிக்கக் கூடாது.

இறைச்சி, முட்டை, மீன், வெங்காயம், பூண்டு உண்ணக் கூடாது.

நீண்ட தூரம் பயணம் கூடாது.

வாழ்க்கையின் முக்கிய முடிவுகளை எடுக்கக் கூடாது.

வீட்டில் சண்டை சச்சரவுகள் கூடாது.

கடுமையான சொற்களை பயன்படுத்தக்கூடாது.

சந்திர காயத்ரி மந்திரம் சொல்ல வேண்டும்.

21 முறை மூக்கின் இடது நாசி வழியாக சுவாசிக்கவும். அப்போது வலது மூக்கை மூடிக் கொள்ள வேண்டும்.

இடது காலை முதலில் எடுத்து வைத்து வெளியில் செல்ல வேண்டும்.