பட்டா மாறுதலுக்கு விண்ணப்பிக்க என்னென்ன ஆவணங்கள் தேவை?

பட்டா மாறுதலுக்கு விண்ணப்பிக்க தேவைப்படும் ஆவணங்களை அரசு வெளியிட்டுள்ளது. அவற்றை தெரிந்து கொள்வோம்.

கிரைய பத்திரம், செட்டில்மெண்ட் பத்திரம், பாகப்பிரிவினை பத்திரம், தான பத்திரம், பரிவர்த்தனை பத்திரம், விடுதலை பத்திரம் ஆகியவை கண்டிப்பாக தேவை. அடையாளச் சான்றுக்கு ஆதார் கார்டு, பான் கார்டு, டிரைவிங் லைசென்ஸ், ரேஷன் அட்டை, பாஸ்போர்ட், வாக்காளர் அட்டையில் ஏதேனும் ஒன்று தேவை. பட்டா மாறுதலுக்கு விண்ணப்பிக்கும் போது குடியிருப்புச் சான்றிற்கு ஆவணம் தேவைப்படும்.

அந்த ஆவணங்களும் பட்டியலிடப்பட்டுள்ளன. அதாவது ஆதார், தொலைபேசி ரசீது, மின் கட்டண அட்டை, சமையல் எரிவாயு ரசீது, பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டையில் ஏதேனும் ஒன்றின் நகல் தேவைப்படும். இந்தச் சான்றுகளின் நகலுடன் நேரடியாக அல்லது ஆன்லைன் மூலமாக பட்டா மாறுதல் கோரி உரிய கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்கலாம்.