சிறுநீரகம் மனித உடலி மிக முக்கியமான உறுப்புகளில் ஒன்றாகும். அதன் முக்கிய நோக்கம் என்னவென்றால் இரத்தத்தில் உள்ள அசுத்தங்களை வடிகட்டி வெளியேற்றுவதாகும். மேற்படி, அவை உடலில் உள்ள கனிம அளவை நிலைபாட்டில் வைத்துக்கொள்வது போன்ற செயல்பாடுகளையும் மேற்கொள்கின்றன. நோய் இல்லாத வாழ்க்கைக்கு ஆரோக்கியமான சிறுநீரக செயல்பாடு மிக அவசியம். ஆகவே சரியான உணவுத் திட்டம் மிகவும் அவசியமாகும். இருப்பினும், சில கேடு விளைவிக்கும் உணவு வகைகளும் உள்ளன. முக்கியமாக சிறுநீரக பிரச்சனை உள்ளவர்கள் அவற்றை அதிகமாக சாப்பிட்டால் சிறுநீரகங்களுக்கு சேதம் ஏற்படலாம்.
சிறுநீரகம் தொடர்பான கோளாறு உள்ளவர்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள்:-
1. சோடா அதிகமாக குடிப்பதை கட்டாயம் தவிர்க்க வேண்டும். இந்த பானத்தில் பாஸ்பரஸ் அதிக அளவில் உள்ளது. இது சிறுநீரகங்களுக்கு சேதத்தை ஏற்படுத்தும்.
2. அதிக சோடியம் கொண்ட பதப்படுத்தப்பட்ட உணவை சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.
3. முழு கோதுமை ரொட்டியின் நுகர்வு குறைந்தபட்சமாக இருக்க வேண்டும்.
4. பிரவுன் அரிசி சிறுநீரகத்திற்கும் தீங்கு விளைவிக்கும். இதில் பாஸ்பரஸ் மற்றும் சோடியம் நிறைந்துள்ளது. எனவே அதிகபடியாக எடுத்துக்கொள்வதை தவிர்க்க வேண்டும்.
5. உடலில் அதிகப்படியான பொட்டாசியம் சிறுநீரகத்தில் தீங்கு ஏற்படுத்தும்.
பொட்டாசியம் அளவு அதிகம் உள்ளவை:-
(i) வாழைப்பழம்
(ii) தக்காளி
ஆகவே வாழைப்பழம் மற்றும் தக்காளியின் அதிக உட்கொள்வதை குறைத்துக்கொள்ள வேண்டும்.
6. சிட்ரிக் ஆசிட் மிகுந்த பழங்களையும் தவிர்க்க வேண்டும்:-
(i) ஆரஞ்சு
(ii) திராட்சை
(iii) அவுரிநெல்லி
7. பதப்படுத்தப்பட்ட இறைச்சி சிறுநீரகங்களுக்கு தீங்கு விளைவிக்கும். ஏனெனில் அதில் அதிக அளவு உப்பு மற்றும் புரதம் உள்ளது.
8. உருளைக்கிழங்கும் சிறுநீரக நோயாளிகள் தவிர்க்க வேண்டும்.
சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும் உணவுகள் அவற்றை சரியாக சாப்பிட்டு வந்தால், சிறுநீரகத்தை மட்டுமின்றி, உடல் முழுவதையும் ஆரோக்கியத்துடன் வைத்துக் கொள்ளலாம்.
சிவப்பு குடைமிளகாய்:-
சிவப்பு குடைமிளகையிகுடைமிளகாயில் பொட்டாசியம் குறைவாகவும், வைட்டமின்களான ஏ, சி மற்றும் பி6, ஃபோலிக் ஆசிட் மற்றும் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைப்பதோடு, எந்த வகையான புற்றுநோயும் வராமல் தடுக்கலாம்.
முளைகட்டிய பயிர்கள்:-
முளைக்கட்டிய பச்சைப் பயிர்களை டயட்டில் சேர்ப்பது மிகவும் நல்லது. இந்த முளைக்கட்டிய பயிர்கள் சிறுநீரகத்தை சுத்தமாக வைத்துக் கொள்வதோடு, சிறுநீரகத்தில் கற்கள் வராமலும் தடுக்கலாம்.
முட்டைகோஸ்:-
முட்டைகோஸ் மிகவும் சிறந்த காய் ஆகும். இந்த காய்கறி சிறுநீரக இயக்கத்தை சீராக வைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
ஆப்பிள்:-
ஆப்பிள் சாப்பிடுவதனால் இரத்த ஓட்டம் சீராக இருப்பதோடு, இரத்தத்தை சுத்திகரிக்கும் சிறுநீரகமும் சுத்தமாக இருக்கும். அதனால் தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டுவது நன்மை தரும்.
ஆலிவ் ஆயில்:-
ஆலிவ் ஆயில் இதயத்திற்கு மிகவும் நல்லது. ஆலிவ் ஆயிலில் உள்ள ஃபேட்டி ஆசிட்டுகள், சிறுநீரகத்தை ஆரோக்கியமாக செயல்பட வைக்கின்றன. வீட்டில் சமையல் செய்யும்பொழுது ஆலிவ் ஆயில் பயன்படுத்துவது மிகவும் நல்லது.
வெங்காயம்:-
வெங்காயம் அதிகம் சாப்பிட்டால், சிறுநீரக கற்களை வருவதை இயற்கையாகவே தடுக்கலாம். மேலும் இது சிறுநீரகத்தை சுத்தமாகவும் வைத்துக் கொள்ள உதவுகிறது.
அதுமட்டுமல்லாமல் சிவப்பு திராட்சை, முட்டை வெள்ளைக்கரு, மீன் போன்ற உணவுகள்கூட சிறுநீரக பிரச்சனை உள்ளவர்கள் சாப்பிடலாம். நீர் சத்து நிறைந்த காய்களை உட்கொள்வது, தினமும் நாம் உட்கொள்ளும் உணவுகளில் உப்பை குறைவாக சேர்த்துக்கொண்டால் சிறுநீரகத்தின் ஆரோக்கியத்தை பராமரிக்கலாம்.