சோடா, எனர்ஜி உள்ளிட்ட கூல்ட்ரிங்க்ஸ், மற்றும் குளிர்பானங்கள் போன்ற சர்க்கரை-இனிப்பு பானங்களில் சர்க்கரை அதிகமாக சேர்க்கப்படுகின்றன, பெரும்பாலும் அவை கார்ன் சிரப், மால்டோஸ் மற்றும் சுக்ரோஸ் போன்ற பல்வேறு வகையான சர்க்கரைகளை உருவாக்குகின்றன. சர்க்கரை-இனிப்பு பானங்களை அதிகளவில் குடிப்பதால் உடல் பருமன், இதய நோய், சிறுநீரக நோய் மற்றும் பல் துவாரங்கள் போன்ற பல்வேறு உடல்நலக் கோளாறுகள் ஏற்படுகின்றன. ஆனால் இதுபோன்ற பானங்களால் முடி உதிர்தல் பிரச்சனையும் கூறப்படுகிறது.
“சர்க்கரை அதிக அடிமையாக்கும். சர்க்கரையின் அதிகப்படியான நுகர்வு ஆண்களின் முடி உதிர்தலுடன் நெருக்கமாக தொடர்புடையது. அதிக சர்க்கரை இரத்த ஓட்டம் மோசமாக வழிவகுக்கிறது. இதன் காரணமாக உச்சந்தலையின் வெப்பநிலை வெகுவாகக் குறைகிறது, இதனால் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பின் முடி உதிர்தல்/அலோபீசியா (வழுக்கை) ஏற்படுகிறது.
சர்க்கரை உட்கொள்ளலை எப்படி குறைப்பது? அதிக சர்க்கரை கொண்ட தின்பண்டங்களை உட்கொள்வதைக் குறைக்கவும் அல்லது அவற்றை மிதமான அளவில் எடுத்துக்கொள்ளவும்.. சர்க்கரைக்கு பதில் தேன் போன்ற இயற்கை இனிப்புகளைத் தேர்ந்தெடுத்து, மல்டிவைட்டமின்கள், வைட்டமின் சி, துத்தநாகம் மற்றும் இரும்புச்சத்து அதிகம் உள்ள சமச்சீரான உணவைப் பின்பற்றுங்கள். வழக்கமான தண்ணீரை உட்கொள்ள முயற்சிக்கவும், சுவையை அதிகரிக்க, இலவங்கப்பட்டை, ஏலக்காய் போன்ற இயற்கை சுவைகளை நீங்கள் முயற்சி செய்யலாம்.
வீட்டில் செய்யப்பட்ட ஃப்ரஷ் ஜூஸ், காய்கறி சாறுகள் போன்ற ஆரோக்கியமான மாற்றுகளைத் தேர்வு செய்யலாம்.கொழுப்புகள் மற்றும் வறுத்த உணவுகள் நிறைந்த, அதிக கலோரி கொண்ட உணவைத் தவிர்க்கவும். பருவகால பழங்கள் மற்றும் காய்கறிகளை உட்கொள்ளுங்கள் குறைந்த அளவு முடி உதிர்வது இயல்பானது என்றாலும், நாளடைவில் முடி உதிர்தல் அதிகமாகும் போது ஊட்டச்சத்து குறைபாடு தொடர்பான காரணிகளை சரிபார்த்து, அதற்கேற்ப மருத்துவ ஆலோசனையைப் பெற உடல் பரிசோதனை செய்ய வேண்டும்.