வீட்டில் எந்த நேரத்தில் விளக்கேற்ற வேண்டும், எப்போது பூஜை செய்ய வேண்டும், கற்பூர தீபம் காட்ட வேண்டும் என்பதற்கான விதிமுறைகள் உள்ளன. அதில் சில குறிப்பிட்ட நேரத்தில் விளக்கேற்றுவது மிகவும் நல்லது என்றும் சில நேரங்களில் தீபம் அல்லது கற்பூரம் ஏற்றக்கூடாது என்றும் வாஸ்து ஜோதிடத்தில் கூறப்படுகிறது. எப்போதெல்லாம் கற்பூரம் ஏற்றலாம் என்பது பற்றி வாஸ்து ஜோதிடத்தில் சில விஷயங்கள் உள்ளன. அதைப்பற்றி இங்கே பார்க்கலாம்.
கற்பூரம் அனைத்து பூஜைகளிலும் தவறாமல் இடம்பெறும் மங்களமான பூஜைப் பொருட்களில் ஒன்று. தினசரி பூஜைகளிலும் சரி, விரதம் மற்றும் பண்டிகைகளின் பூஜைகளின் போதும் சரி, கற்பூரம் கண்டிப்பாக ஏற்றப்படும். கற்பூரம் ஏற்றும் போதே, வீடு முழுவதும் ஒரு விதமான பாசிட்டிவ் எனர்ஜி அங்கே வெளிப்படும். ஆனால், கற்பூரத்தை சரியாக முறையில், சரியான நேரத்தில் ஏற்ற வேண்டும்.
பலருக்கும் வாஸ்து சாஸ்த்திரத்தில் குறிப்பிட்டுள்ளபடி, எந்த நேரத்தில் கற்பூரத்தை ஏற்ற வேண்டும், எப்போது ஏற்றக் கூடாது என்பது பற்றிய சரியாக தெரியவில்லை. வேத ஜோதிடர்களின் கருத்துப்படி, எப்போதுமே பிரம்ம முகூர்த்தத்தில் கற்பூரம் ஏற்றலாம். பிரம்ம முகூர்த்தம் மிகவும் சுபிட்சமாகவும், நாள் முழுவதும் நேர்மறை ஆற்றலையும் கொடுக்கும். அதே போல, தினசரி காலையில் வீட்டின் முன்பு கற்பூரம் ஏற்றி வைக்கலாம்.
இதனால் என்னென்ன நன்மைகள் உங்களுக்கு கிடைக்கும் என்பதை சில நாட்களிலேயே உணர்வீர்கள். அதேபோல மாலை நேரத்தில் விளக்கேற்றும் போதும் அல்லது மாலை நேரத்தில் பூஜை செய்யும்போது கற்பூரம் ஏற்றலாம். ஒவ்வொரு முறை விளக்கேற்றும் போதும் கற்பூரம் ஏற்றுவது வீட்டுக்கு நல்லது என்று கூறப்படுகிறது.
காலை நேரத்தில் பூஜை செய்யும் பொழுது கற்பூரம் ஏற்றக்கூடாது என்று வாஸ்து ஜோதிடர்கள் கூறுகிறார்கள். காலை நேரத்தில் வீட்டில் நெய்விளக்கு அல்லது நல்லெண்ணெய் விளக்குத்தான் ஏற்ற வேண்டும். அதுதான் நல்லது என்றும் கற்பூரம் காட்டக்கூடாது என்று தெரிவிக்கிறார்கள்.
அதே போல, கற்பூரத்தை எங்கு வேண்டுமானாலும் ஏற்றக்கூடாது. சிலர் வீட்டில் சிறிய பானைகளில் கற்பூரத்தை ஏற்றுவார்கள். இது வீட்டுக்கு உகந்ததல்ல என்று கூறப்படுகிறது. எப்பொழுதுமே தீபம் கற்பூரம் ஏற்றுவதற்கு பித்தளையால் செய்யப்பட்ட கற்பூர ஆரத்தி தட்டு அல்லது தூபக்கால் வைத்து தான் கற்பூரம் ஏற்ற வேண்டும். பித்தளை விளக்கில் தீபம் ஏற்றுவது, வீட்டில் சுபிட்சத்தை உண்டாக்கும். அதே போல, இரவு நேரத்தில் அனைவரும் தூங்க செல்வதற்கு முன்பு வீட்டின் ஏதாவது ஒரு மூலையில் கற்பூரத்தை ஏற்றலாம். இது இரவில் வீட்டில் நிம்மதியான சூழல் நிலவ உதவும் மற்றும் தூங்குவதற்கான நல்ல ஒரு சூழலை ஏற்படுத்திக் கொடுக்கும்.