நம்முடைய வாழ்வில் மிக இன்றியமையாத முக்கிய விழாக்களில் ஒன்று முன்னோர்கள் வழிபாடு. மாதா மாதம் வரும் அமாவாசை அன்று முன்னோர்களை வழிபடுவது மிகச் சிறந்த ஒன்றாக கருதப்படுகிறது. அந்த வகையில் நாளை மார்ச் 10ஆம் தேதி மாசி மாத அமாவாசை. அதிலும் நாளை ஞாயிற்றுக்கிழமை ஞாயிற்றுக்கிழமை அமாவாசை வருவதால் இந்த நாளின் முக்கியத்துவம் மேலும் அதிகரித்துள்ளது. இந்த மாசி மாத அமாவாசை தேதியும் இந்துக்களால் ஒரு திருவிழா போல் கொண்டாடப்படுகிறது. இந்நாளில் வழிபாட்டுடன் தானம் செய்யும் மரபு உள்ளது. ஒரு வருடத்தில் 12 அமாவாசைகள் வருகிறது அதில் இந்த மாசி மாதம் வருகிற அமாவாசையும் சிறப்பு வாய்ந்தது என்று ஜோதிடர் மணீஷ் சர்மா கூறுகிறார்.
மேலும், அமாவாசை திதியின் அதிபதி நம் முன்னோர்கள்தான். இதன் காரணமாக ஒவ்வொரு மாதமும் அமாவாசை தினத்தில் முன்னோர்களுக்கு சிறப்பு தூப- தியானம் மற்றும் அன்னதானம் செய்வது குடும்பத்திற்கு நல்லது. அதில் ஞாயிறு மற்றும் அமாவாசை ஒன்றாக சேர்ந்து வந்தால் என்னென்ன சுப காரியங்களை செய்யலாம் என்பதை பற்றி இந்த பதிவில் ஜோதிடர் என்ன சொல்லுகிறார் என்று தெரிந்து கொள்ளுங்கள்… அமாவாசை அன்று அதிகாலையில் எழுந்து நீராடிவிட்டு, முதலில் சூரியபகவானுக்கு அர்க்கியம் படையுங்கள். செம்புப் பாத்திரத்தில் தண்ணீரை நிரப்பி, அதில் குங்குமம் சாதம் சேர்த்து, ஓம் சூர்யாய நம என்று சொல்லி சூரியனுக்கு நீரைச் படைக்கவும். அப்படி சூரிய பகவானுக்கு தண்ணீர் வழங்கும்போது, இரு கைகளையும் உயர்த்தி, பானையில் இருந்து விழும் நீரோடையில் சூரிய பகவானை தரிசிக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். தண்ணீர் கொடுக்கும்போது சூரியனை நேரடியாகப் பார்க்கக் கூடாது.
சூரிய பூஜைக்குப் பிறகு, துளசிக்கு நீர் ஊற்ற வேண்டும்.. தண்ணீர் கொடுத்த பிறகு, துளசி செடியைச் சுற்றி வந்து வணங்கிட வேண்டும். முதலில் வீட்டு கோவிலில் விநாயகப் பெருமானை வழிபடுங்கள். விநாயகப் பெருமானுக்கு நீர், பால், பஞ்சாமிர்தம் ஆகியவற்றால் அபிஷேகம் செய்ய வேண்டும். அதன் பின்னர் மலர்களால் அலங்காரம் செய்து இனிப்புகளை வழங்குங்கள். தூபக் குச்சிகளை ஏற்றி ஆரத்தி செய்யுங்கள். விநாயகப் பூஜைக்குப் பிறகு, சிவன், விஷ்ணு மற்றும் ஸ்ரீ கிருஷ்ணரை வணங்குங்கள். அப்படி கிருஷ்ணரை வழிபடும்போது துளசி இலைகளுடன் வெண்ணெய் மற்றும் சர்க்கரையை வைத்து வழிபடுவது சிறப்பு. பின்னர் க்ரீம் கிருஷ்ணாய நம என்ற மந்திரத்தை உச்சரிக்கவும். ஞாயிறு அன்று துளசி இலைகளை பறிக்கக்கூடாது என்பதை நினைவில் கொள்ளுங்கள், எனவே துளசி இலைகளை ஒரு நாள் முன்பு அதாவது சனிக்கிழமையிலேயே பறித்து வைத்துக் கொள்ளுங்கள்.
இது போன்ற தெய்வ வழிபாட்டை அதிகாலையில் செய்ய வேண்டும். மதியம் 12 மணிக்குப் பிறகு முன்னோர்களுக்கு ஷ்ராத்தம், தர்ப்பணம் போன்ற சுப காரியங்களைச் செய்யுங்கள். பசுவின் சாணத்தால் செய்யப்பட்ட வரட்டியில் மூதாதையர்களை தியானித்து தூபமிட வேண்டும். தூபமிட்ட பிறகு, உள்ளங்கையில் தண்ணீரை எடுத்து, கட்டைவிரல் பக்கத்திலிருந்து தண்ணீரை வழங்கவும். முடிந்தவரை அன்றைய தினம் யாராவது ஒருவருக்கு அன்னதானம் செய்வது பாவங்களை போக்கும் என்கிறார் ஜோதிடர்.
அமாவாசையில் கட்டாயம் செய்யக்கூடியவை
1. சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு மாலையில் துளசிக்கு அருகில் தீபம் ஏற்றவும். மாலைக்குப் பிறகு துளசியைத் தொடக்கூடாது என்பதை நினைவில் கொள்ளுங்கள். தூரத்தில் இருந்து துளசியை வழிபடுவது நல்லது.
2. அமாவாசை அன்று, வீட்டின் அருகே எங்காவது குளம் இருந்தால், மீன்கள் இருக்கும் இடத்தில், மீன்களுக்கு மாவு உருண்டைகளை கொடுக்கலாம்.
3. வீட்டில் பசு நெய் தீபம் ஏற்றவும். ஏழை எளியவர்களுக்கு அவரவர் தகுதிக்கேற்ப தானம் அளிக்க வேண்டும்.
4. அமாவாசை அன்று, சிவன் கோவிலுக்குச் சென்று, சிவலிங்கத்திற்கு செம்புப் பாத்திரத்தில் நீரைப் படையுங்கள். ஓம் நம சிவாய என்ற மந்திரத்தை உச்சரிக்கவும்.
5. அனுமான் கோவிலுக்கும் சென்று விளக்கை ஏற்றி, ஹனுமான் பாடலை பாடவும். இவற்றையெல்லாம் செய்தால் நம் குடும்பத்தில் உள்ள பித்ரு தோஷம், நாம் தெரியாமல் செய்த பாவங்கள், சாபங்கள் என அனைத்தும் விலகி நம் முன்னோர்களின் முழு ஆசியும் கிடைக்கும் என்பது ஐதீகம்.