ராகுலுடன் 'கை'கோர்த்த கனிமொழி...

ஹரியானா : கடந்த செப்டம்பா் மாதம் 7ந் தேதி கன்னியாகுமரியில் தொடங்கிய ‘பாரத் ஜோடோ யாத்ரா’ எனும் ‘இந்திய ஒற்றுமை பயணம்’ கேரளா, ஆந்திரா, கா்நாடகா, தெலுங்கானா, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களைக் கடந்து ஹரியானா மாநிலத்தில் நடைபோட்டு வருகிறது.

நேற்று நிறைவு பெற்ற ஹரியானா மாநில இந்திய ஒற்றுமை பயணத்தில், கனிமொழி எம்.பி,யும் தன்னை இணைத்துக் கொண்டார்.

இந்திய ஒற்றுமை பயணத்தில் ராகுல்காந்தியுடன் பங்கேற்ற புகைப்படங்களுடன் தனது சமூக வலைதள பக்கத்தில் கனிமொழி வெளியிட்டுள்ள பதிவில், ‘நமது பன்முகத்தன்மையைக் கொண்டாடும் இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தில் ராகுலுடன் பங்கேற்றது மகிழ்ச்சியளிக்கிறது. இந்தியாவை ஒன்றிணைக்கும் ராகுல்காந்தியின் தொலைநோக்குப் பார்வையை நாட்டு மக்களும் பின்பற்றுவர்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.