இந்திய பொருளாதார உயர்வால், உலகிலேயே 5ஆவது இடத்திற்கு முன்னேற்றம்!

இந்திய பொருளாதாரம் 3.75 ட்ரில்லியன் டாலராக உயர்ந்து உலகின் ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இந்தியாவின் ஜிடிபி (GDP) 3.75 லட்சம் கோடி டாலராக உயர்ந்துள்ளது என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 2014ஆம் ஆண்டில் இந்தியாவின் ஜிடிபி 2 லட்சம் கோடி டாலராக இருந்ததாகவும், இப்போது 3.75 லட்சம் கோடி டாலராக உயர்ந்துள்ளதாகவும் அவர் ஒப்பிட்டுள்ளார்.

உலகின் 10ஆவது மிகப்பெரிய பொருளாதாரம் என்ற இடத்தில் இருந்து உலகின் ஐந்தாவது மிகப்பெரிய பொருளாதாரம் என்ற இடத்துக்கு இந்தியா முன்னேறியுள்ளதாகவும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். தற்போது உலக பொருளாதாரத்தில் இந்தியா பிரகாசமான இடத்தில் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டுள்ள தகவல்படி, உலகின் முன்னணி பொருளாதாரங்களின் பட்டியல்:

அமெரிக்கா – 26,854 பில்லியன் டாலர்
சீனா – 19,374 பில்லியன் டாலர்
ஜப்பான் – 4,410 பில்லியன் டாலர்
ஜெர்மனி – 4,309 பில்லியன் டாலர்
இந்தியா – 3,737 பில்லியன் டாலர்
இங்கிலாந்து – 3,159 பில்லியன் டாலர்
பிரான்ஸ் – 2,924 பில்லியன் டாலர்
கனடா – 2,089 பில்லியன் டாலர்
ரஷ்யா – 1,840 பில்லியன் டாலர்
ஆஸ்திரேலியா – 1,550 பில்லியன் டாலர்

கடந்த 2022-23ஆம் நிதியாண்டில் இந்திய பொருளாதாரம் 7.2 சதவீத வளர்ச்சி அடைந்துள்ளது. கடந்த மார்ச் காலாண்டில் இந்திய பொருளாதாரம் 6.1 சதவீத வளர்ச்சி அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.