Bank of India வங்கியில் பல பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அரசு பொது துறை வங்கியான Bank of Indiaவில் பணியிடங்கள் காலியாக உள்ளது. இப்பணிக்கான தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்கவும்.
பணி:
Credit Officer in General Banking stream – 350 பணியிடங்கள்
IT Officer in Specialist stream – 150 பணியிடங்கள்
கல்வித்தகுதி: மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு துறையில் பட்டம் (பட்டப்படிப்பு) பெற்றிருக்க வேண்டும். மேலும், பதவிக்கு ஏற்ப கல்வித்தகுதி மாறுபடுகிறது. ஆகையால் விரிவான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிக்கையை பார்த்து தெரிந்து கொள்ளவும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, குழு விவாதம் மற்றும் நேர்முக தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: பிப்ரவரி – 25, 2023
விண்ணப்பிக்க வேண்டிய முறை: ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும்,
விண்ணப்ப கட்டணம்:
1.பொது/ EWS / OBC பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் மற்றும் தகவல் கட்டணம் ரூ.850/-
2. SC / ST / BWD பிரிவினருக்கு தகவல் கட்டணம் ரூ.175/-
விண்ணப்பிக்கும் வழிமுறைகள்:
• https://bankofindia.co.in/recruitment-notice என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று பணி குறித்த கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ளவும்.
• அதன்பின்னர், விண்ணப்ப அறிக்கையை பதிவிறக்கம் செய்யவும்
• பணி குறித்த கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ள தகவல்களை தெரிந்து கொள்ளவும்.
• பின் விண்ணப்ப படிவத்தில் கேட்கப்பட்ட தகவல்களை சரியாக பூர்த்தி செய்யவும்.
விண்ணப்ப படிவத்தை பிப்ரவரி 25ஆம் தேதிக்குள் பூர்த்தி செய்து, சமர்ப்பிக்க வேண்டும்.
மேலும், விரிவான மற்றும் கூடுதல் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்க்கவும். அதுவே உறுதியான தகவல்களாகும். https://bankofindia.co.in/documents/20121/8561835/Webnotice+2022-23_3+%28Notice%29.pdf