புரோட்டா என்றாலே சால்னாதான் எல்லாருக்கும் நினைவு வரும். ஆனா அந்த சால்னா எப்படி செய்யணும்னு பலபேருக்கு தெரியாது. நாங்க சொல்லித் தரோம் வீட்ல அத செஞ்சு அசத்துங்க.
தேவையானவை:
சின்ன வெங்காயம் – 100 கிராம்
தக்காளி (பெரியது) – 50 கிராம்
பச்சை மிளகாய் – 4
இஞ்சி, பூண்டு விழுது – 2 தேக்கரண்டி
நாட்டுக்கோழி – 500 கிராம்
மஞ்சள்தூள் – 1 தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு.
மசாலா அரைக்க:
எண்ணெய் – 1 மேஜைக்கரண்டி
பட்டை – 1 இன்ச்
இலவங்கம் – 3
மிளகு – 1 தேக்கரண்டி
சோம்பு – 1 மேஜைக்கரண்டி
பூண்டு – 5 பற்கள்
வெங்காயம் (பெரியது) – 2
தக்காளி (பெரியது) – 4
தேங்காய் துருவல் – 1 கப்
கரம்மசாலா தூள் – 1 தேக்கரண்டி.
முந்திரிப் பருப்பு – 10
மிளகாய்த் தூள் – 1 மேஜைக்கரண்டி
கொத்தமல்லி பொடி – 1 மேஜைக்கரண்டி
மஞ்சள்தூள் – 1 தேக்கரண்டி
கசகசா – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு.
செய்முறை விளக்கம்
வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கவும். கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சோம்பு பட்டை, இலவங்கம், மிளகு, கறிவேப்பிலை போட்டு நன்றாக வதக்கவும். பிறகு அதில் நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தைச் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். பின்னர் நறுக்கிய தக்காளி, மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், மல்லித் தூள் மற்றும் கரம் மசாலாவை சேர்க்கவும். வதங்கியதும் துருவிய தேங்காய் மற்றும் முந்திரி பருப்பை சேர்த்து வதக்கி நாட்டுக்கோழியைப் போட்டு தண்ணீர் ஊற்றி 20 நிமிடங்கள் கொதிக்கவிடவும். பரோட்டா சால்னாவுக்கு முக்கியமே நல்லெண்ணெய்தான். கோழி உடல் சூட்டை அதிகரிக்கும். அச்சூட்டை நல்லெண்ணெய் சமன் செய்யும்.