பெண்களுக்கு துத்தநாகம் எனப்படும் ஜிங்க் சத்து எவ்வளவு முக்கியத்துவம் வகிக்கிறது என்பதை பற்றி தெரிந்து கொள்வோம். ஜிங்க் சத்து என்பது நம் அன்றாட செயல்களை பராமரிக்க உதவுகிறது. நம் உடலில் ஜிங்க் சத்து இருப்பது பல பிரச்சனைகளுக்கு தீர்வாக இருக்கிறது. அதுவே, நம் உடலில் ஜிங்க் சத்து குறைபாடு இருந்தால் வளர்ச்சி குன்றுதல், வயிற்றுப்போக்கு, முடி உதிர்தல், கண் மற்றும் சரும பாதிப்புகள், நோய் எதிர்ப்பு சக்தி குறைதல் உள்ளிட்ட நோய்கள் ஏற்படும்.
மேலும், உடலில் இருக்கும் என்சைம்கள் உற்பத்திக்கு ஜிங்க் அவசியமான ஒன்று. அதுபோல, வைட்டமின்களை பெறுவது என்பதும் முக்கியமான ஒன்று தான். அதுமட்டுமல்லாமல், ஜிங்க் சத்தில் நோய் எதிர்ப்பு சக்தி இருப்பதால் கொரோனா காலங்களில் நமக்கு தொற்று ஏற்படாமல் இருக்க உதவுகிறது. பெண்களின் உடலை பேணிக்காப்பதில் ஜிங்க் சத்து முக்கிய பங்கு வகிக்கிறது. பெண்களின் உடலில் நோய் எதிர்ப்பு உயிரணுக்கள் உற்பத்தி மற்றும் செயல்பாட்டிற்கு ஜிங்க் சத்து உதவுகிறது. பெண்கள் ஜிங்க் உணவுகள் எடுத்துக் கொள்வதன் மூலம் இருதய நோய்கள் மற்றும் டைப் 2 நீரிழிவு நோய்கள் வராமல் இருக்க உதவுகிறது. எலும்புகள் மற்றும் பற்களை வலுப்படுத்துவதற்கு ஜிங்க் சத்து தேவைப்படுகிறது.
பெண்களின் சருமத்தில் உள்ள செல்கள் சேதமடைவதை தடுக்க ஜிங்கில் உள்ள ஆண்டிஆக்சிடண்ட் பண்புகள் உதவுகின்றன. பெண்களுக்கு முடி உதிர்தல், கர்ப்ப பை பாதுகாப்பு, கருமுட்டை வளர்தல் ஆகியவற்றிற்கு ஜிங்க் சத்து தேவைப்படுகிறது. கண்பார்வை திறனை மேம்படுத்துவதற்கு ஜிங்கில் உள்ள வைட்டமின்கள் மற்றும் மினரல் பயன்படுகிறது.